/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சேதமடைந்த சிமென்ட் சாலை சீரமைப்பது எப்போது?
/
சேதமடைந்த சிமென்ட் சாலை சீரமைப்பது எப்போது?
ADDED : ஆக 25, 2025 11:03 PM

செ ய்யூர் ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கு செய்யூர் கிராமத்தில், 800க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
கிராமத்தில் உள்ள நியாய விலைக் கடை தெருவில், 7 ஆண்டுகளுக்கு முன் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது.
சாலை ஓரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு, சிமென்ட் சாலை சேதமடைந்து பள்ளங்கள் ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
பின், ஊராட்சி நிர்வாகம் சார்பாக மண் கொட்டி தற்காலிகமாக சாலை சீரமைக்கப்பட்டது.
பருவமழையின் போது மீண்டும் மண் அரிப்பு ஏற்பட்டு, மேலும் சாலை சேதமடைய வாய்ப்பு உள்ளது.
ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ச.அலெக்ஸ்,
வடக்கு செய்யூர்.