/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையோரம் அகற்றப்படும் மண் குவாரிக்கு எடுத்துச் செல்வது ஏன்?
/
சாலையோரம் அகற்றப்படும் மண் குவாரிக்கு எடுத்துச் செல்வது ஏன்?
சாலையோரம் அகற்றப்படும் மண் குவாரிக்கு எடுத்துச் செல்வது ஏன்?
சாலையோரம் அகற்றப்படும் மண் குவாரிக்கு எடுத்துச் செல்வது ஏன்?
ADDED : பிப் 14, 2025 01:10 AM

சித்தாமூர்:சித்தாமூர் அடுத்த தொன்னாடு கிராமத்தில், செய்யூர் - போளூர் சாலையில் இருந்து நீர்பெயர் செல்லும், 4 கி.மீ., துார தார்ச்சாலை உள்ளது.
தொன்னாடு, ஒரங்காவலி, நீர்பெயர் உள்ளிட்ட கிராம மக்கள் இச்சாலையை பயன்படுத்துகின்றனர்.
இந்த சாலை குறுகி உள்ளதால், இப்பகுதியில் செயல்படும் கல்குவாரிகளில் இருந்து செல்லும் லாரிகளால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தன.
மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பாக, தற்போது உள்ள இந்த சாலையை 23 அடி அகல சாலையாக விரிவாக்கம் செய்ய, தனியார் நிறுவனத்திற்கு,'டெண்டர்' விடப்பட்டு, சாலை விரிவாக்கப் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், சாலை ஓரத்தில் இருந்து அகற்றப்படும் மண், லாரிகள் வாயிலாக தொன்னாடு பகுதியில் உள்ள ஒரு குவாரிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
குவாரிக்கு எடுத்துச் செல்லப்படும் இந்த மண்ணை முறைகேடாக விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளதால், தொன்னாடு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனால், சாலை ஓரத்தில் இருந்து எடுக்கப்படும் மண்ணை, பொது இடத்தில் கொட்ட, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

