/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கணவரை கார் ஏற்றி கொல்ல முயற்சி மனைவி, கள்ளக்காதலனுடன் 5 பேர் கைது
/
கணவரை கார் ஏற்றி கொல்ல முயற்சி மனைவி, கள்ளக்காதலனுடன் 5 பேர் கைது
கணவரை கார் ஏற்றி கொல்ல முயற்சி மனைவி, கள்ளக்காதலனுடன் 5 பேர் கைது
கணவரை கார் ஏற்றி கொல்ல முயற்சி மனைவி, கள்ளக்காதலனுடன் 5 பேர் கைது
ADDED : ஆக 19, 2025 12:26 AM

ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுார் அருகே, கள்ளக்காதலனுடன் சேர்ந்து, கணவரை கார் ஏற்றி கொல்ல முயன்ற மனைவி, கள்ளக்காதலன் உட்பட ஐந்து பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
ஸ்ரீபெரும்புதுார் அருகே மேவளூர்குப்பம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன், 50. இவர், அதே பகுதியில், 'ஆர்த்தி' என்ற பெயரில் பிரியாணி கடை நடத்தி வருகிறார்.
இவரது மனைவி பவானி, 38. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். பிரியாணி கடையில், திருவாரூரைச் சேர்ந்த மதன்ராஜ், 36, என்பவர் மாஸ்டராக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், ஹரிகிருஷ்ணன் மனைவி பவானிக்கும், மாஸ்டர் மதன்ராஜுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டு, இருவரும் பழகி வந்தனர்.
இதையறிந்த ஹரிகிருஷ்ணன், மாஸ்டர் மதன்ராஜை வேலையை விட்டு நீக்கினார். இருந்தும், இருவருக்கிடையே பழக்கம் தொடர்ந்தது. இதனால், ஹரிகிருஷ்ணன் மற்றும் பவானிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், பவானி மற்றும் மதன்ராஜின் கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள ஹரிகிருஷ்ணனை தீர்த்து கட்ட இருவரும் திட்டமிட்டனர்.
கடந்த 9ம் தேதி இரவு, இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து கடைக்கு சென்ற ஹரிகிருஷ்ணன் மீது, கார் ஏற்றி கொல்ல முயற்சி செய்தனர். ஹரிகிருஷ்ணன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதுகுறித்து, ஸ்ரீபெரும்புதுார் போலீசார் வழக்கு பதிந்து, ஹரிகிருஷ்ணன் மனைவி பவானியை கைது செய்து விசாரித்தனர். கள்ளக்காதலன் மதன்ராஜ் அவரது நண்பர் மணிகண்டனுடன் சேர்ந்து, கணவரை கார் ஏற்றி கொலை செய்ய முயன்றதை பவானி ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, பவானி, கள்ளக்காதலன் மதன்ராஜ், அவரது கூட்டாளிகள் மணிகண்டன், 29, விக்னேஷ், 21, விஜய், 31, ஆகிய ஐந்து பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.