/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பொற்பனங்கரணையில் பஸ் நிழற்குடை அமைக்கப்படுமா?
/
பொற்பனங்கரணையில் பஸ் நிழற்குடை அமைக்கப்படுமா?
ADDED : ஏப் 29, 2025 12:27 AM
அச்சிறுபாக்கம்,
பொற்பனங்கரணை ஊராட்சியில், பயன்பாடின்றி இருந்த பயணியர் நிழற்குடை இடித்து அகற்றப்பட்டது.
அச்சிறுபாக்கம் அடுத்த பொற்பனங்கரணை ஊராட்சியில், 200 குடும்பங்கள் வசிக்கின்றன.
அங்குள்ள பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் வேலைக்குச் செல்வோர் பயன்பெறும் வகையில், ஒரத்தி- - எலப்பாக்கம் செல்லும் சாலையில், 20 ஆண்டுகளுக்கு முன் நிழற்குடை அமைக்கப்பட்டது.
உரிய பராமரிப்பின்றி இருப்பதால், பொதுமக்கள் இதை பயன்படுத்துவதில்லை.
வெயில், மழையில் வெளியே நின்று பேருந்து பிடித்து சென்று வந்தனர்.
நிழற்குடையை சீரமைக்க வேண்டிய ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகளுக்கு இதுகுறித்து புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து, கடந்த மாதம், பயன்பாடின்றி இருந்த பயணியர் நிழற்குடை இடித்து அகற்றப்பட்டது.
எனவே, அப்பகுதியில் புதிதாக நிழற்குடை அமைக்க ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனனர்.

