/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பெரும்பேர் கண்டிகை ஊராட்சியில் சமுதாய நலக்கூடம் அமைக்கப்படுமா?
/
பெரும்பேர் கண்டிகை ஊராட்சியில் சமுதாய நலக்கூடம் அமைக்கப்படுமா?
பெரும்பேர் கண்டிகை ஊராட்சியில் சமுதாய நலக்கூடம் அமைக்கப்படுமா?
பெரும்பேர் கண்டிகை ஊராட்சியில் சமுதாய நலக்கூடம் அமைக்கப்படுமா?
ADDED : ஜூன் 26, 2025 09:27 PM
அச்சிறுபாக்கம்:பெரும்பேர் கண்டிகை ஊராட்சியில், சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டுமென, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரும்பேர் கண்டிகை ஊராட்சியில், 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்கள் விவசாயம் மற்றும் தனியார் நிறுவனங்களில் தினக்கூலிகளாக வேலை செய்து வருகின்றனர்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலுள்ள இவர்கள் தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை அச்சிறுபாக்கம், மேல்மருவத்துார், மதுராந்தகம் பகுதிகளிலுள்ள தனியார் திருமண மண்டபங்களில், அதிக வாடகைக்கு நடத்தும் சூழல் உள்ளது.
அதனால், பொருளாதார சிக்கல் ஏற்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
இப்பகுதியில் ஹிந்து சமய அறநிலையைத் துறைக்குச் சொந்தமான, பழமை வாய்ந்த முருகன் கோவில் மற்றும் எல்லையம்மன் கோவில், தான்தோன்றீஸ்வரர் கோவில்கள் உள்ளன.
முருகன் கோவிலில், முகூர்த்த நாட்களில் திருமணங்கள் நடைபெறுகின்றன.
ஆனால் தங்குமிடம், உணவு பரிமாறுவதற்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. எனவே, அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி, ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து, பெரும்பேர் கண்டிகையில் சமுதாய நலக்கூடம் அமைத்து தர வேண்டுமென, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.