/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆடுகளுக்கு மர்ம நோய் தாக்குதல் மருத்துவ முகாம் அமைக்கப்படுமா?
/
ஆடுகளுக்கு மர்ம நோய் தாக்குதல் மருத்துவ முகாம் அமைக்கப்படுமா?
ஆடுகளுக்கு மர்ம நோய் தாக்குதல் மருத்துவ முகாம் அமைக்கப்படுமா?
ஆடுகளுக்கு மர்ம நோய் தாக்குதல் மருத்துவ முகாம் அமைக்கப்படுமா?
ADDED : மார் 05, 2024 03:51 AM

திருப்போரூர், : செங்கல்பட்டு மாவட்டத்தில், பயிர்கள் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளைப் போல், ஆடு, மாடுகளை வளர்க்கும் தொழிலிலும், ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில், திருப்போரூர் அடுத்த கரும்பாக்கம் கிராமம், இந்திரா நகர் பகுதியில், விவசாயி தனலட்சுமி, 10க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார்.
கடந்த ஒரு வாரமாக, ஆடுகளுக்கு மர்ம நோய் தாக்குதல் ஏற்பட்டு, இதுவரை இரண்டு ஆடுகள் இறந்துவிட்டன. இதனால், பொருளாதார இழப்பு ஏற்பட்டு, ஆடு வளர்ப்பு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
எனவே, நோய் தாக்குதல் அதிகரிக்கும் முன்னரே, நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கால்நடை மருத்துவ முகாம் அமைக்க, கால்நடைத்துறை முன்வர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.