/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வாயலுார் வி.ஏ.ஓ., ஆபீசுக்கு புதிய கட்டடம் கட்டப்படுமா?
/
வாயலுார் வி.ஏ.ஓ., ஆபீசுக்கு புதிய கட்டடம் கட்டப்படுமா?
வாயலுார் வி.ஏ.ஓ., ஆபீசுக்கு புதிய கட்டடம் கட்டப்படுமா?
வாயலுார் வி.ஏ.ஓ., ஆபீசுக்கு புதிய கட்டடம் கட்டப்படுமா?
ADDED : அக் 21, 2024 01:19 AM

புதுப்பட்டினம்:கல்பாக்கம் அடுத்த வாயலுார் ஊராட்சி, சத்திரம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலகம், நீண்டகாலமாக இயங்கியது. ஊரின் மைய பகுதியில் இயங்கியதால், அனைத்து பகுதி மக்களும், எளிதாக அந்த அலுவலகம் சென்று வந்தனர்.
நாளடைவில், அலுவலக கட்டடம் பாழடைந்தது. அதை இடித்து, புதிய கட்டடம் கட்டுமாறு, அப்பகுதியினர் வலியுறுத்தியும், தற்போது வரை கட்டப்படவில்லை.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, நீண்ட தொலைவில் உள்ள ஊராட்சி சேவை மைய கட்டடத்தில், அலுவலகம் இயங்கும் நிலையில், அரசு சேவைகள் பெறுவோர், அங்கு சென்றுவர சிரமப்படுகின்றனர்.
அதனால், பொதுமக்கள் பாதிப்பை தவிர்க்க, பழைய கட்டட பகுதியில், புதிய அலுவலக கட்டடம் கட்ட வேண்டும் என, அப்பகுதிவாசிகள் அரசிடம் வலியுறுத்துகின்றனர்.