/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வாகனம் மோதியதில் சேதமான சிக்னல் கம்பம் சீரமைக்கப்படுமா?
/
வாகனம் மோதியதில் சேதமான சிக்னல் கம்பம் சீரமைக்கப்படுமா?
வாகனம் மோதியதில் சேதமான சிக்னல் கம்பம் சீரமைக்கப்படுமா?
வாகனம் மோதியதில் சேதமான சிக்னல் கம்பம் சீரமைக்கப்படுமா?
ADDED : மார் 31, 2025 02:34 AM

மறைமலைநகர்:திருச்சி - - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை, தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலை.
இந்த சாலையில் மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் செல்லும் சந்திப்பில், தாம்பரம் மார்க்கத்தில் விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில், நெடுஞ்சாலை துறை சார்பில் சோலார் மின்சாரத்தில் இயங்கும் தானியங்கி போக்குவரத்து 'சிக்னல்' கம்பம் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது.
சில மாதங்களுக்கு பின், இந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சிக்னல் விளக்கு உடைந்து, கம்பமும் சாய்ந்த நிலையில் உள்ளது.
இந்த பகுதியில் இரவு நேரங்களில் விபத்து அதிகம் நடைபெறும் பகுதி என்பதால், சேதமடைந்த சிக்னல் கம்பம் மற்றும் விளக்குகளை சீரமைக்க, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.