/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருக்கழுக்குன்றம் தாலுகா அலுவலகத்தில் கூடுதல் ஆதார் மையம் அமைக்கப்படுமா?

ADDED : நவ 06, 2025 11:48 PM

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் தாலுகா அலுவலகத்தில் செயல்படும் ஆதார் மையத்தில் மக்கள் கூட்டம் அதிகரிப்பதால், கூடுதல் மையம் அமைக்க வேண்டுமென, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருக்கழுக்குன்றம் தாலுகா அலுவலக வளாகத்தில், ஆதார் சேவை மையம் இயங்குகிறது.
திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம், கல்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள ஊராட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஆதார் கார்டில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம், சிறுவர் கைரேகை பதிவு உள்ளிட்ட சேவைகளுக்காக, இந்த மையத்திற்கு வருகின்றனர்.
காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இயங்கும் இந்த மையத்தில், தினமும் 30 'டோக்கன்'கள் வழங்கப்படுகின்றன. இதற்காக, மக்கள் முன்னதாகவே அங்கு குவிந்து, 'டோக்கன்' பெற முண்டியடிக்கின்றனர்.
'சர்வர்' பிரச்னை உள்ளிட்ட பல காரணங்களால், டோக்கன் பெற்ற அனைவருக்கும், அதே நாளில் சேவை அளிக்க இயலவில்லை. இதனால், டோக்கன் பெற்று எஞ்சியுள்ளவர்கள், மறுநாளும் வரவேண்டியுள்ளது.
இந்த ஆதார் மையத்தில், காத்திருக்க போதிய இடவசதியில்லை. தாலுகாவில் உள்ள ஒரே ஆதார் மையம் என்பதால், தினமும் ஏராளமானோர் குவிகின்றனர்.
எனவே, இங்கு மற்றொரு ஆதார் மையம் ஏற்படுத்துமாறு, மக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.