/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆலத்துார் - சிறுதாவூர் சாலையை சீரமைத்து அகலப்படுத்த கோரிக்கை
/
ஆலத்துார் - சிறுதாவூர் சாலையை சீரமைத்து அகலப்படுத்த கோரிக்கை
ஆலத்துார் - சிறுதாவூர் சாலையை சீரமைத்து அகலப்படுத்த கோரிக்கை
ஆலத்துார் - சிறுதாவூர் சாலையை சீரமைத்து அகலப்படுத்த கோரிக்கை
ADDED : நவ 06, 2025 11:49 PM

திருப்போரூர்: ஆலத்துார் -- சிறுதாவூர் சாலையை சீரமைத்து, அகலப்படுத்த வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஓ.எம்.ஆர்., மற்றும் திருப்போரூர் -- -திருக்கழுக்குன்றம் சாலையை இணைக்கும் ஆலத்துார் -- சிறுதாவூர் சாலை, 3 கி.மீ., துாரம் உள்ளது.ஆலத்துார் சிட்கோ வளாகத்தில், 30க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.
சிறுதாவூரைச் சுற்றியுள்ள ஆமூர், முந்திரித்தோப்பு, மடையத்துார், மானாமதி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள், ஆலத்துார் - சிறுதாவூர் சாலையைப் பயன்படுத்துகின்றனர்.
இச்சாலை ஆங்காங்கே சேதமடைந்தும், குறுகியதாகவும் உள்ளது. இதனால், இரவு நேரத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன், இச்சாலையில் சிறுபாலம் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டு, சில பிரச்னைகளால் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதன் அருகே மாற்றுப்பாதையாக, தற்காலிகமாக மண் சாலை அமைக்கப்பட்டது. தற்போது மழைக்காலம் என்பதால், இந்த தற்காலிக மண் சாலை சகதியாகி, அதில் செல்லும் வாகனங்கள் சேற்றில் புதைந்து சிக்கிக் கொள்கின்றன.
இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. அந்த வகையில் நேற்றும், தனியார் பள்ளி பேருந்து ஒன்று, இந்த சாலையிலுள்ள சேற்றில் சிக்கிக் கொண்டு, நீண்ட நேரம் அப்புறப்படுத்த முடியாமல், மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்பட்டது.
அந்த பள்ளி வாகனம் சேற்றில் ஒரு பக்கமாக சாய்ந்ததால், பள்ளி மாணவர்கள் அச்சமடைந்தனர்.அதன் பின், அந்த வழியாகச் சென்றவர்கள், சேற்றில் சிக்கிய பேருந்தை தள்ளி மீட்டனர்.
எனவே, ஆலத்துார் -- சிறுதாவூர் சாலையை அகலப்படுத்துவது உடன், மேற்கண்ட தற்காலிக சாலையை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

