/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அரசு பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டப்படுமா?
/
அரசு பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டப்படுமா?
ADDED : மே 29, 2025 10:01 PM
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த நெல்லிக்குப்பம் கிராமத்தில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளி வகுப்பறை கட்டடம் பழுதடைந்ததால், 2022ம் ஆண்டு இடித்து அகற்றப்பட்டது.
இதனால், கூடுதல் பள்ளி கட்டடம் தேவைப்படுகிறது.
கூடுதல் கட்டடம் இல்லாததால் மாணவர்களுக்கு வகுப்பு நடத்துவதற்கு சிரமம் ஏற்பட்டு, மரத்தடியில் நடத்த வேண்டி சூழல் உருவாகியுள்ளது.
எனவே, மேற்கண்ட பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்ட, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.