/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருப்போரூர் -- வல்லக்கோட்டை தடத்தில் பேருந்து இயக்கப்படுமா?
/
திருப்போரூர் -- வல்லக்கோட்டை தடத்தில் பேருந்து இயக்கப்படுமா?
திருப்போரூர் -- வல்லக்கோட்டை தடத்தில் பேருந்து இயக்கப்படுமா?
திருப்போரூர் -- வல்லக்கோட்டை தடத்தில் பேருந்து இயக்கப்படுமா?
ADDED : ஆக 11, 2025 11:28 PM
திருப்போரூர், திருப்போரூரில் இருந்து சென்னேரி, சிங்கபெருமாள் கோவில் வழியாக, வல்லக்கோட்டைக்கு புதிய தடத்தில் பேருந்துகள் இயக்க வேண்டுமென, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரிலிருந்து அனுமந்தபுரம், சிங்கபெருமாள் கோவில் வழியாக, வல்லக்கோட்டை செல்லும் சாலை உள்ளது.
இந்த தடத்தில் திருப்போரூரில் புகழ்பெற்ற கந்தசுவாமி கோவில், அனுமந்தபுரத்தில் அகோர வீரபத்திரர் கோவில், சிங்கபெருமாள் கோவில் பகுதியில் நரசிம்மர் கோவில் ஆகியவை உள்ளன.
ஒரகடத்தில், 25க்கும் மேற்பட்ட தொழிற்பேட்டைகள் உள்ளன. வல்லக்கோட்டையில், புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.
இந்த தடத்தில் பல கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் வசிப்போர் கல்வி, தொழில், மருத்துவம் போன்ற பல்வேறு தேவைகளுக்கு பேருந்துகளில் அதிக அளவில் பயணிக்கின்றனர்.
ஆனால், அதற்கேற்ப போதிய பேருந்து வசதி இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ - மாணவியர் தினமும் அவதிப்படும் நிலை தொடர்கிறது.
எனவே, திருப்போரூரில் இருந்து சென்னேரி, சிங்கபெருமாள் கோவில் வழியாக, வல்லக்கோட்டைக்கு புதிய தட பேருந்துகள் இயக்க வேண்டுமென, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.