/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சித்தாமூர் பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்படுமா?
/
சித்தாமூர் பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்படுமா?
சித்தாமூர் பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்படுமா?
சித்தாமூர் பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்படுமா?
ADDED : நவ 15, 2024 01:13 AM
சித்தாமூர்:சித்தாமூர் பஜார் பகுதி யில் பேருந்து நிறுத்தம் உள்ளது. இப்பகுதியில் பி.டி.ஓ., அலுவலகம், வட்டார வேளாண் அலுவலகம், அரசு மேல்நிலைப் பள்ளி, காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளன.
மதுராந்தகம், சூணாம்பேடு, செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வோர், அரசு அலுவலகங்களுக்கு வருவோர் மற்றும் சித்தாமூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமவாசிகள், இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
தினமும், 100க்கும் மேற்பட்டோர் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த நிறுத்தத்தில் குடிநீர் வசதி இல்லாததால், பேருந்திற்காக காத்திருக்கும் பெண்கள் மற்றும் முதியோர் கடும் அவதிப்படுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சித்தாமூர் பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.