/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குளத்தாஞ்சேரி கால்வாயில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
/
குளத்தாஞ்சேரி கால்வாயில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
குளத்தாஞ்சேரி கால்வாயில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
குளத்தாஞ்சேரி கால்வாயில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
ADDED : அக் 02, 2024 09:24 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த ரெட்டிப்பாளையம் ஊராட்சியில், குளத்தாஞ்சேரி கிராமத்தில், புல எண்: 973-3ல் குளக்கரை புறம்போக்கில் உள்ள வடிநீர் கால்வாயை சீரமைக்காததால், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதனால், மழைக்காலங்களில் வசிப்பிட பகுதிகளில் மழைநீர் தேங்குவதால், அப்பகுதிவாசிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
இதனை தவிர்க்க, கால்வாய் சீரமைப்பு மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, செங்கல்பட்டு சமூக ஆர்வலர் வாசுதேவன், காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தார்.
அதன்பின், கால்வாயை சீரமைக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும், ஊராட்சி நிர்வாகத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவிட்டார். வடகிழக்கு பருவமழைக்கு முன், மேற்கண்ட பணிகளை செயல்படுத்த வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.