/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருப்போரூர்- - நெம்மேலி சாலையில் அரசு பேருந்து சேவை துவக்கப்படுமா?

ADDED : டிச 17, 2024 12:27 AM
திருப்போரூர், திருப்போரூர் ஒன்றியத்தில், ஓ.எம்.ஆர்., சாலை, இ.சி.ஆர்., சாலைகளை இணைக்கும் திருப்போரூர் --- நெம்மேலி சாலை உள்ளது.
இச்சாலையின் இடையே, பகிங்ஹாம் கால்வாயில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இ.சி.ஆர்., சாலை சார்ந்த கானத்துார், முட்டுக்காடு, கோவளம் உள்ளிட்ட பகுதி மக்களும், ஓ.எம்.ஆர்., சாலை சார்ந்த திருப்போரூர், தண்டலம் உள்ளிட்ட பகுதி மக்களும் இச்சாலையை பயன் படுத்தி வருகின்றனர்.
மேலும், நெம்மேலியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்படுகிறது. இதில், ஓ.எம்.ஆர்., சாலையை சார்ந்த ஏராளமான மாணவ - மாணவியர்கள் படிக்கின்றனர்.
இந்நிலையில், இந்த வழித்தடத்தில் அரசு போக்குவரத்து வசதி இல்லாததால், மாணவர்கள், கிராம மக்கள், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, இந்த சாலை வழியாக, பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.