sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வனப்பகுதி குறுக்கிடும் சாலைகளை அமைக்க அனுமதி... கிடைக்குமா?:  31 ஊராட்சிகளில் போக்குவரத்து வசதியின்றி மக்கள் அவதி

/

வனப்பகுதி குறுக்கிடும் சாலைகளை அமைக்க அனுமதி... கிடைக்குமா?:  31 ஊராட்சிகளில் போக்குவரத்து வசதியின்றி மக்கள் அவதி

வனப்பகுதி குறுக்கிடும் சாலைகளை அமைக்க அனுமதி... கிடைக்குமா?:  31 ஊராட்சிகளில் போக்குவரத்து வசதியின்றி மக்கள் அவதி

வனப்பகுதி குறுக்கிடும் சாலைகளை அமைக்க அனுமதி... கிடைக்குமா?:  31 ஊராட்சிகளில் போக்குவரத்து வசதியின்றி மக்கள் அவதி


UPDATED : ஜூலை 24, 2025 07:36 AM

ADDED : ஜூலை 23, 2025 10:08 PM

Google News

UPDATED : ஜூலை 24, 2025 07:36 AM ADDED : ஜூலை 23, 2025 10:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 31 ஊராட்சிகளில், வனப்பகுதிகளில் குறுக்கிடும் சாலைகளில்சீரமைப்பு பணி மேற்கொள்ள, வனத்துறை அனுமதி கிடைக்கவில்லை. இந்த சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர், காட்டாங்கொளத்துார், அச்சிறுபாக்கம், திருக்கழுக்குன்றம், புனிததோமையார்மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள, 31 ஊராட்சிகளில், வனப்பகுதிகள் உள்ளன.

Image 1446936


இந்த வனப்பகுதிகளில், சுற்றுப்புறத்தில் உள்ள கிராமங்களை இணைக்கும் சாலைகள் செல்கின்றன.

பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த சாலைகள், கடும் சேதமடைந்துள்ளன. குறிப்பாக, 31 இடங்களில் சாலைகள் சேதமடைந்து, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன.

சில இடங்களில் சாலை குறுகிய சாலையாக இருப்பதால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. அத்துடன் பேருந்து, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களும் சாலை பள்ளங்களில் ஏறி இறங்கும் போது, பழுதாகி விடுகின்றன. இதனால், பல்வேறு பணிகளுக்காக செல்வோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

போக்குவரத்து அவசியம் கருதி, சாலைகளை அகலப்படுத்தி மேம்படுத்த, ஊரக வளர்ச்சித் துறை நிர்வாகம் முடிவெ டுக்கிறது. ஆனால், இந்த சாலைகளை சீரமைக்க, வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால், சாலை அமைக்க முடியாத சூழல் ஏற்படுகிறது.

போக்குவரத்து அவசியம் கருதி, சாலைகளை அகலப்படுத்தி மேம்படுத்த, ஊரக வளர்ச்சித் துறை நிர்வாகம் முடிவெ டுக்கிறது. ஆனால், இந்த சாலைகளை சீரமைக்க, வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால், சாலை அமைக்க முடியாத சூழல் ஏற்படுகிறது.

வனப்பகுதி குறுக்கிடும் பகுதிகளில் சாலை அமைக்க வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம், வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம், பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான அனைத்து துறைகள் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில், வனத்துறை பகுதிகளில் குறுக்கிடும் சாலைகளை சீரமைக்க, வனத்துறை அனுமதி வழங்க வேண்டும் என, கலெக்டர் சினேகாவிடம் ஊரக வளர்ச்சித் துறையினர் தெரிவித்தனர்.



இதையடுத்து, இந்த பிரச்னையில் நடவடிக்கை எடுக்க, மாவட்ட வனத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணைந்து செயல்பட வேண்டும் என, கலெக்டர் சினேகா உத்தரவிட்டுள்ளார்.

15 ஆண்டுகளாக அவதி மதுராந்தகம் அருகே நேமம், செண்டிவாக்கம், அகிலி ஊராட்சிகளுக்கு உட்பட்ட எல்லை பகுதியில், அச்சிறுபாக்கம் வனச்சரகத்திற்கு உட்பட்ட காப்புக்காடு உள்ளது. அதில், நேமம் பகுதியிலிருந்து அத்திவாக்கம் வழியாக வந்தவாசி செல்லும் மாநில நெடுஞ்சாலையுடன் இணையும் சாலையை புதிதாக அமைக்க, கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக வனத்துறை அனுமதி தராததால், சாலை அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அதனால், சாலை குண்டும் குழியுமாகி, பயன்படுத்த முடியாத அளவுக்கு உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

- ராமச்சந்திரன், 47, நேமம்.

அனுமதி கிடைப்பது சிரமம்


கரிக்கிலி பறவைகள் சரணாலயத்திலிருந்து வெள்ளப்புத்துார் செல்லும் சாலை, முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்க, நிர்வாக அனுமதி பெற்று துவங்கப்பட்டது. ஆனால், வனத்துறைக்கு உட்பட்ட பகுதியில் 1 கி.மீ.,க்கு சாலை அமைக்க முடியாமல், கடந்த சில மாதங்களாக தடையில்லா சான்று பெற முடியாமல், பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வனத்துறை அதிகாரிகளை சந்தித்து மனு அளித்து, அரசு திட்டங்கள் மற்றும் ஊராட்சிகளின் வளர்ச்சி திட்ட பணிகளை துவங்குவதற்கு மிகவும் காலதாமதம் ஏற்படுகிறது. ஊராட்சி வளர்ச்சி பணிகளுக்கு, வனத்துறை அனுமதி அளித்து முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

- கொடியான், 65, கரிக்கிலி.

சாலை சேதமான வனப்பகுதிகள்


திருப்போரூர் ஊராட்சி ஒன்றியம்


ஊராட்சி சாலை பெயர்

சோனலுார் சோனலுார் - பொளச்சலுார் சாலை

பொன்மார் பொன்மார் - பொளச்சலுார் சாலை

இள்ளலுார் பெரியார் நகர் மெயின் ரோடு

ஆலத்துார் ஆலத்துார் - வெங்கலேரி சாலை

தண்டரை ரெட்டிக்குப்பம் - ஒரத்துார் சாலை

பெருந்தண்டலம் சிறுங்குன்றம் - பெருந்தண்டலம்

சிறுங்குன்றம் சிறுங்குன்றம் பள்ளி சாலை - மருதேரி சாலை

தண்டரை ஒரத்துார் சாலை

பனங்காட்டுப்பாக்கம் பனங்காட்டுப்பாக்கம் சாலை

பெரியஇரும்பேடு பெரிய இரும்பேடு மெயின்ரோடு

அனுமந்தபுரம் சிங்கபெருமாள்கோவில் சாலை - ரெட்டிக்குப்பம் சாலை

* காட்டாங்கொளத்துார் ஊராட்சி ஒன்றியம்


ஆப்பூர் தாலிமங்கலம் - ஆப்பூர் சாலை, வலையபுத்துார் சாலை

வீராபுரம் வீராபுரம் சாலை

குருவன்மேடு தாசரிகுன்னத்துார் சாலை

திருவடிசூலம் திருவடிசூலம் - ஈச்சங்கரணை சாலை

குமிழி ஊராட்சி அம்மணம்பாக்கம் - மேட்டுப்பாளை சாலை

* அச்சிறுபாக்கம் ஊராட்சி ஒன்றியம்


ஒரத்துார் ஒரத்துார் சாலை

கரிக்கிலி கரிக்கிலி - கே. சித்தாமூர் சாலை, வெள்ளப்புத்துார் சாலை

அத்திவாக்கம் நெம்மேலி - அத்திவாக்கம் சாலை

ஊனமலை மேட்டுப்பாளையம் - ஊனமலை சாலை

* புனிததோமையார் மலை ஊராட்சி ஒன்றியம்


பெரும்பாக்கம் சித்தலப்பாக்கம் ஊராட்சி சாலை

* திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியம்


நரப்பாக்கம் அகதீஸ்வரமங்கலம் - கொரப்பட்டு சாலை

தத்தளூர் தத்தளூர் சாலை

மாம்பாக்கம் வீராணம் ரோடு - மேட்டுமங்கலம் சாலை

சோகண்டி காங்கேயன்குப்பம் சாலை

மோசிவாக்கம் திருவானைக்கோவில் - சீயாளன்கொள்ளை சாலை






      Dinamalar
      Follow us