/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருப்போரூர் தாலுகாவுடன் சாத்தங்குப்பம் இணைக்கப்படுமா?
/
திருப்போரூர் தாலுகாவுடன் சாத்தங்குப்பம் இணைக்கப்படுமா?
திருப்போரூர் தாலுகாவுடன் சாத்தங்குப்பம் இணைக்கப்படுமா?
திருப்போரூர் தாலுகாவுடன் சாத்தங்குப்பம் இணைக்கப்படுமா?
ADDED : ஏப் 24, 2025 09:14 PM
திருப்போரூர்:செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய கேளம்பாக்கம் ஊராட்சியில் கேளம்பாக்கம், சாத்தங்குப்பம் ஆகிய இரண்டு கிராமங்கள் உள்ளன.
இதில், தாலுகா நிர்வாக கட்டுப்பாட்டில் சாத்தங்குப்பம் கிராமம் மட்டும் மாம்பாக்கம் குறுவட்டத்தில் உள்ளதால்,
கூடுவாஞ்சேரியில் இயங்கும் வண்டலுார் தாலுகா அலுவலகத்திற்கு செல்ல வேண்டும்.
இதனால், பொதுமக்கள் ஊரக வளர்ச்சித் திட்ட சேவைகளைப் பெற 8 கி.மீ.,ல் உள்ள திருப்போரூர் பி.டி.ஓ., அலுவலகத்திற்கும், வருவாய்த் துறை சார்ந்த சேவைகளைப் பெற, 20 கி.மீ.,ல் உள்ள கூடுவாஞ்சேரிக்கும் செல்ல வேண்டியுள்ளது.
இவ்வாறு ஒரே ஊராட்சி சார்ந்த இரண்டு கிராமங்கள் வெவ்வேறு இடங்களில் உள்ள அலுவலகங்களுக்குச் செல்வதால், பொதுமக்களுக்கு வீண் அலைச்சல், கால விரயம் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர்.
எனவே, சாத்தங்குப்பம் கிராமத்தை, கேளம்பாக்கம் வருவாய் குறு வட்டத்திலும், திருப்போரூர் தாலுகாவிலும் இணைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

