/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தொழுப்பேடு மயான பாதைக்கு தார்ச்சாலை அமைக்கப்படுமா?
/
தொழுப்பேடு மயான பாதைக்கு தார்ச்சாலை அமைக்கப்படுமா?
தொழுப்பேடு மயான பாதைக்கு தார்ச்சாலை அமைக்கப்படுமா?
தொழுப்பேடு மயான பாதைக்கு தார்ச்சாலை அமைக்கப்படுமா?
ADDED : பிப் 13, 2024 08:17 PM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்டு, தொழுப்பேடு ஊராட்சி உள்ளது. இப்பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
தொழுப்பேடு- - சூணாம்பேடு செல்லும் நெடுஞ்சாலையிலிருந்து, தொழுப்பேடு மயானத்திற்கு செல்லும் வழி உள்ளது.
மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், 2020 -- -21ம் ஆண்டில், கப்பி சாலை அமைக்கப்பட்டது.
இந்த சாலையை, அப்பகுதி விவசாயிகளும் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, அந்த சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
எனவே, ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள், இந்த சாலையை ஆய்வு செய்து, புதிதாக தார்ச்சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.