/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மயான பாதையை தரம் உயர்த்தி கான்கிரீட் சாலை அமைக்கப்படுமா?
/
மயான பாதையை தரம் உயர்த்தி கான்கிரீட் சாலை அமைக்கப்படுமா?
மயான பாதையை தரம் உயர்த்தி கான்கிரீட் சாலை அமைக்கப்படுமா?
மயான பாதையை தரம் உயர்த்தி கான்கிரீட் சாலை அமைக்கப்படுமா?
ADDED : ஜூலை 21, 2025 02:07 AM

அச்சிறுபாக்கம்:தண்டரை புதுச்சேரியில் மயான பாதையை, சிமென்ட் சாலையாக தரம் உயர்த்தி அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
அச்சிறுபாக்கம் ஒன்றியம், தண்டரை புதுச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட காலனி பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில், தண்டரை புதுச்சேரி சாலையில், மயானத்திற்கு செல்லும் மண்பாதை உள்ளது.
மழைக்காலங்களில், சடலங்களை கொண்டு செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. அதனால், மண்பாதையை தரம் உயர்த்தி, கான்கிரீட் சாலையாக அமைக்க, அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலக ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.