/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இடியும் நிலையில் ஆப்பூர் பஜனை கோவில் நடவடிக்கை எடுக்குமா அறநிலையத் துறை?
/
இடியும் நிலையில் ஆப்பூர் பஜனை கோவில் நடவடிக்கை எடுக்குமா அறநிலையத் துறை?
இடியும் நிலையில் ஆப்பூர் பஜனை கோவில் நடவடிக்கை எடுக்குமா அறநிலையத் துறை?
இடியும் நிலையில் ஆப்பூர் பஜனை கோவில் நடவடிக்கை எடுக்குமா அறநிலையத் துறை?
ADDED : செப் 28, 2024 12:34 AM

மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் அடுத்த ஆப்பூர் கிராமத்தின் மலை மீது, பழமையான பல்லவர் கால நித்ய கல்யாண பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது.
இக்கோவில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
திருமண தடை நீங்க, வேலை கிடைக்க வேண்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பலர், குடும்பத்துடன் வந்து செல்கின்றனர்.
இக்கோவிலில், உற்சவர் மலை மீது உள்ளார். இக்கோவிலின் உற்சவர் நித்யகல்யாண பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் ஆப்பூர் ஊருக்கு மத்தியில், அகத்தீஸ்வரர் கோவில் வளாகத்தில், தனி கோவில் அமைந்து உள்ளது.
பஜனை கோவிலான இதன் கட்டுமானம் விரிசல் அடைந்தும், சுவர்கள் உடைந்தும், பெரிய பெரிய மரங்கள் வளர்ந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:
மலை மீது உள்ள பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாதம் மூன்று நாள், பாரிவேட்டை திருவிழாவின் போது, கீழே உள்ள பஜனை கோவிலில் இருக்கும் உற்சவர் மற்றும் தாயாரை அலங்கரித்து, மீது எடுத்து சென்று திருவிழா நடத்துவது வழக்கம்.
கடந்த 1988ம் ஆண்டு, கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட பின், சில ஆண்டுகள் மட்டுமே பாரிவேட்டை திருவிழா நடத்தப்பட்டது. தற்போது, கோவில் சிதிலமடைந்து உள்ளதால், பக்தர்கள் கோவிலுக்கு வர அச்சப்படுகின்றனர்.
ஒரு சிலர் மட்டுமே, புரட்டாசி உள்ளிட்ட மாதங்களில் கோவிலுக்கு செல்கின்றனர். இதே வளாகத்தில் உள்ள 1,000 ஆண்டு பழமையான அகத்தீஸ்வரர் கோவிலும், முறையாக பூஜை நடத்தப்படுவதில்லை.
எனவே, பழமையான கோவிலை புனரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.