/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விரிசல் விழுந்த அங்கன்வாடி இடித்து புதிதாக கட்டப்படுமா?
/
விரிசல் விழுந்த அங்கன்வாடி இடித்து புதிதாக கட்டப்படுமா?
விரிசல் விழுந்த அங்கன்வாடி இடித்து புதிதாக கட்டப்படுமா?
விரிசல் விழுந்த அங்கன்வாடி இடித்து புதிதாக கட்டப்படுமா?
ADDED : ஜன 04, 2025 01:17 AM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அடுத்த மின்னல் சித்தாமூர் ஊராட்சியில் உள்ள பழைய அங்கன்வாடி கட்டடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்ட வேண்டுமென, குழந்தைகளின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொழுப்பேடு- ஒரத்தி வழியாக வந்தவாசி செல்லும் மாநில நெடுஞ்சாலையில், மின்னல் சித்தாமூர் கிராமம் உள்ளது.
இப்பகுதியில், 2 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதில், நெடுங்கல் கிராமத்திற்கு செல்லும் சாலையோரம், காட்டுநாயக்கர் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடி கட்டடத்தில், 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வந்தனர்.
சில மாதங்களுக்கு முன் இந்த கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டதால், தற்காலிகமாக மாற்று கட்டடத்தில், அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.
எனவே, பழைய கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தி, அதே பகுதியில் புதிதாக அங்கன்வாடி மைய கட்டடம் அமைத்து தர மாவட்ட, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குழந்தைகளின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.