/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பழுதான கருங்குழி வி.ஏ.ஓ., அலுவலகம் இடித்துவிட்டு புதிதாக கட்டப்படுமா?

ADDED : நவ 08, 2025 01:33 AM

மதுராந்தகம்: கருங்குழியில் உள்ள, கிராம நிர்வாக அலுவலகம் பழுதடைந்து உள்ளதால், இடித்துவிட்டு, புதிதாக கட்ட வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுராந்தகம் அடுத்த கருங்குழி பேரூராட்சிக்கு உட்பட்ட, சென்னை -- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஓரம், 20 ஆண்டுகளுக்கு முன், கிராம நிர்வாக அலுவலகம் கட்டப்பட்டது.
தற்போது இந்த கட்டடம் பழுதடைந்து, ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது. மழைக்காலங்களில், நீர்க்கசிவு ஏற்பட்டு ஆவணங்கள் மற்றும் பதிவேடு களை பாதுகாப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.
மேலும், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் கட்டடம் உள்ளது. இதனால், அலுவலகத்திற்கு வரும் மக்கள் அச்சப் படுகின்றனர்.
எனவே, பழைய கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு, மீண்டும் அதே இடத்தில் புதிதாக, கிராம நிர்வாக அலுவலகம் கட்ட வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.