/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரேஷன் கடைக்கு புது கட்டடம் வேலுார் கிராமத்தினர் வேண்டுகோள்
/
ரேஷன் கடைக்கு புது கட்டடம் வேலுார் கிராமத்தினர் வேண்டுகோள்
ரேஷன் கடைக்கு புது கட்டடம் வேலுார் கிராமத்தினர் வேண்டுகோள்
ரேஷன் கடைக்கு புது கட்டடம் வேலுார் கிராமத்தினர் வேண்டுகோள்
ADDED : நவ 08, 2025 01:38 AM

சித்தாமூர்: வேலுார் கிராமத்தில், ரேஷன் கடைக்கு புது கட்டடம் கட்ட வேண்டு மென, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
சித்தாமூர் அருகே சூணாம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட வேலுார் கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள அரசு ஆரம்ப பள்ளி அருகே, ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது.
இந்த கடையில், 180க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள், உணவு பொருட்கள் வாங்கி பயனடைகின்றனர்.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடத்தில், ரேஷன் கடை செயல்படுகிறது. இந்த கட்டடம் கடுமையாக சேதமடைந்து உள்ளதால், மழைக்காலத்தில் அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் நனைந்து வீணாகின்றன.
இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும், தற்போது வரை ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் அமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என, கிராம மக்கள் குற்றஞ்சாட்டு கின்றனர்.
எனவே, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

