/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாற்றுத்திறனாளி கழிப்பறை பயன்பாட்டிற்கு வருமா?
/
மாற்றுத்திறனாளி கழிப்பறை பயன்பாட்டிற்கு வருமா?
ADDED : பிப் 17, 2024 01:22 AM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் பேரூராட்சி, 15 வார்டுகளை உள்ளடக்கியது. இதில், 10வது வார்டுக்குட்பட்ட பகுதியில், பேரூராட்சி அலுவலகத்திற்கு எதிரே, கடந்த 2011 - 12ம் ஆண்டு, மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை கட்டப்பட்டது.
தற்போது, சில மாதங்களாக மூடப்பட்டுள்ள கழிப்பறை, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளது. பயணியர் நிழற்குடை அருகே உள்ள கழிப்பறை பூட்டியே கிடப்பதால், மாற்றுத்திறனாளி ஆண், பெண் இயற்கை உபாதைகளை கழிக்க, பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
எனவே, பேரூராட்சி நிர்வாகத்தினர், உடனடியாக கழிப்பறையை திறந்து, நிரந்தர பணியாளர் அமைத்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.