/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குடிநீர் கை 'பம்ப்' சீரமைக்கப்படுமா?
/
குடிநீர் கை 'பம்ப்' சீரமைக்கப்படுமா?
ADDED : அக் 14, 2025 12:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அச்சிறுபாக்கம் ஒன்றியம், தண்டரை புதுச்சேரி ஊராட்சியில் இருந்து வேடந்தாங்கல் வரை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில், தண்டரை புதுச்சேரி மயானம் அருகே ஈமச்சடங்கு செய்யும் இடம் உள்ளது. இங்கு ஈமச்சடங்கு செய்ய வரும் மக்களின் தண்ணீர் தேவைக்காக, 10 ஆண்டுகளுக்கு முன் ஆழ்துளைக் கிணறு அமைத்து, தண்ணீர் வசதி ஏற்படுத்தப்பட்டது. தற்போது, இந்த கை 'பம்ப்' பயன்பாடு இல்லாமல் துார்ந்து போகும் அளவிற்கு மண் மூடியுள்ளது.
இந்த கை பம்ப்பை சீரமைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-இரா.மகேஷ்குமார்,- மதுராந்தகம்