/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அவசர சிகிச்சை மையம் ஆலத்துார் சிட்கோவில் வருமா?
/
அவசர சிகிச்சை மையம் ஆலத்துார் சிட்கோவில் வருமா?
ADDED : பிப் 16, 2025 08:46 PM
திருப்போரூர்:திருப்போரூரை அடுத்துள்ள ஆலத்துார் கிராமத்தில், சிட்கோ தொழிற்பேட்டை உள்ளது.
இங்கு உயிர் காக்கும் மருந்துகள் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்கும் 30க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.
இந்த தொழிற்சாலைகளில், 15,000க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுக்காற்று, விஷம் கலந்த கழிவுநீர் போன்ற பிரச்னைகள் ஒருபுறம் இருந்தாலும், இங்குள்ள தொழிற்சாலைகளில் ஏற்படும் தீ விபத்தால், தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
தீ விபத்து ஏற்படும் போது தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டால், அவசர உதவிக்கு மருத்துவம் பார்க்க, சிட்கோ வளாகத்தில் அவசர சிகிச்சைக்கான மருத்துவமனை இல்லை.
திருப்போரூர், கேளம்பாக்கம், செங்கல்பட்டு போன்ற இடங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது. அதற்குள், பாதிப்பு அதிகரிக்கும்.
எனவே, தொழிலாளர்களின் நலன் கருதி, ஆலத்துார் சிட்கோ வளாகத்தில் அவசர சிகிச்சை மையம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

