/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
உயர்கோபுர மின்விளக்கு சத்யா நகரில் அமையுமா?
/
உயர்கோபுர மின்விளக்கு சத்யா நகரில் அமையுமா?
ADDED : நவ 08, 2024 01:26 AM

மறைமலைநகர்:காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில் உள்ள சத்யா நகர் பகுதியில், நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள ஜி.எஸ்.டி., சாலையோரம் வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கும் விடுதி உள்ளது.
இதில், பல்வேறு மாவட்டங்களைச் இளம்பெண்கள் தங்கி ஒரகடம், மகேந்திரா சிட்டி பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
இப்பகுதியில், இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுவதால், பேருந்துகளுக்காக காத்திருக்கும் பெண்கள் ஒருவித அச்சத்துடனேயே காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறியதாவது:
மகளிர் விடுதி முன் ஜி.எஸ்.டி., சாலையில் விளக்குகள் இல்லாததால், அதிகாலையில் வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் வேலை முடிந்து விட்டு வருவோர் அச்சத்துடன் வரும் நிலை உள்ளது.
விபத்து மற்றும் திருட்டு அபாயம் அதிகம் உள்ளதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த பகுதியில் உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.