/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வீட்டுமனைப்பட்டா வழங்கப்படுமா? உய்யாலிகுப்பம் மீனவர்கள் எதிர்பார்ப்பு
/
வீட்டுமனைப்பட்டா வழங்கப்படுமா? உய்யாலிகுப்பம் மீனவர்கள் எதிர்பார்ப்பு
வீட்டுமனைப்பட்டா வழங்கப்படுமா? உய்யாலிகுப்பம் மீனவர்கள் எதிர்பார்ப்பு
வீட்டுமனைப்பட்டா வழங்கப்படுமா? உய்யாலிகுப்பம் மீனவர்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜன 23, 2025 07:52 PM
புதுப்பட்டினம்:வாயலுார் உய்யாலிகுப்பத்தில் விடுபட்ட மீனவர்களுக்கு, வீட்டுமனைப்பட்டா வழங்க, மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கல்பாக்கம் அடுத்த, வாயலுார் ஊராட்சி உய்யாலிகுப்பத்தில், மீனவர்கள் வசிக்கின்றனர். இப்பகுதி வீடுகள் கடலரிப்பால் பாதிக்கப்பட்ட நிலையில், தமிழக அரசு தனியார் நிலத்தை கிரயம் பெற்று, அவர்களிடம் ஒப்படைத்தது. 2004 சுனாமி பாதிப்பைத் தொடர்ந்து, தன்னார்வ நிறுவனம் வாயிலாக வீடுகளும் கட்டி ஒப்படைக்கப்பட்டன.
வருவாய்த்துறை குளறுபடிகளால், வீட்டுமனைப்பட்டா வழங்கப்படாமல், 20 ஆண்டுகளாக இழுபறியானது. தினமலர் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டதையடுத்து, கடந்த ஆண்டு வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது. ஆனால், புல எண் 207/2 களம் புறம்போக்கில் கட்டிய 24 வீடுகளுக்கு, வீட்டு மனைப்பட்டா வழங்கப்படவில்லை.
இதுகுறித்து, மீனவர்கள் கூறியதாவது:
எங்கள் பகுதியில் அரசு ஏற்பாட்டில் கட்டப்பட்ட வீடுகளுக்கு, 20 ஆண்டுகளுக்கு பின், வீட்டுமனைப்பட்டா அளித்தனர். அதிலும் 24 வீடுகளுக்கு அளிக்கவில்லை. நாங்கள் பலமுறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் கண்டுகொள்ளவில்லை.
சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசனிடம், மனு அளித்துள்ளோம். விடுபட்ட வீடுகளுக்கு விரைந்து பட்டா வழங்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

