/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காஞ்சிபுரத்தில் நிறுத்த ஆள் தேடும் அ.தி.மு.க., காங்.,கில் பழைய 'கை'க்கு சீட்டு கிட்டுமா?
/
காஞ்சிபுரத்தில் நிறுத்த ஆள் தேடும் அ.தி.மு.க., காங்.,கில் பழைய 'கை'க்கு சீட்டு கிட்டுமா?
காஞ்சிபுரத்தில் நிறுத்த ஆள் தேடும் அ.தி.மு.க., காங்.,கில் பழைய 'கை'க்கு சீட்டு கிட்டுமா?
காஞ்சிபுரத்தில் நிறுத்த ஆள் தேடும் அ.தி.மு.க., காங்.,கில் பழைய 'கை'க்கு சீட்டு கிட்டுமா?
ADDED : மார் 08, 2024 01:24 AM
காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில் திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், உத்திரமேரூர் என, ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன.
குழப்பம்
இந்த தொகுதிக்கான வேட்பாளர் யார் என்பதை தேர்ந்தெடுக்க, பல கட்சிகளும் தீவிர ஆலோசனையில் உள்ளன.
இந்நிலையில், அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இணைந்துள்ளது; மற்ற கட்சிகளுக்கான பேச்சு நடந்து வருகிறது.
இதில், காஞ்சிபுரம் தொகுதியில் நேரடியாக அ.தி.மு.க., நிற்க உள்ளது. ஆனால், யாரை நிறுத்துவது என்பதில் குழப்பமாக உள்ளது.
காரணம், 10 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்ய வேண்டும். மக்களிடம் செல்வாக்கு பெற்ற நபராகவும் இருக்க வேண்டும் என, தலைமை நினைக்கிறது.
காஞ்சிபுரம் தொகுதிக்குள் அப்படியான நபர் கிடைக்காததால், செங்கல்பட்டு மாவட்டத்தில் வசிக்கும் தென் சென்னை தொகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க., நிர்வாகி ஒருவரை போட்டியிட வைக்க பேச்சு நடத்தி வருகிறது.
தென் சென்னை நபரை நிற்க வைக்க, மாவட்ட செயலர்கள் ஆறுமுகம், சோமசுந்தரம், சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோரும் சம்மதம் தெரிவித்து, பேச்சில் ஈடுபட்டு வருவதாகவும், அ.தி.மு.க.,வினர் தெரிவிக்கின்றனர்.
தொகுதிக்குள் இருக்கும் நிர்வாகிகள் சிலர், 'சீட்' கேட்டு விருப்பம் தெரிவித்தும் கண்டுகொள்ளப்படவில்லை என தெரிகிறது.
அதேபோல், தி.மு.க., கூட்டணியில் உள்ள காங்., சார்பில், பழைய 'கை'யான விஸ்வநாதன், காஞ்சிபுரம் தொகுதியில் மீண்டும் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறார்.
ஆர்வம் காட்டவில்லை
மதுரையைச் சேர்ந்த இவர், காஞ்சிபுரத்தில் மீண்டும் வலம் வந்து மக்களிடம் ஆதரவு கேட்க வசதியாக, நாவலுாரில் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளதாக, தகவல் கிடைத்துள்ளது. கடந்த 2009ல், காஞ்சிபுரம் தொகுதியில் எம்.பி.,யாக இருந்தவர் இவர்.
ஆனால், காஞ்சிபுரம் தொகுதியில் கடந்த முறைபோல், இந்த தேர்தலிலும் தி.மு.க.,வைச் சேர்ந்தவரே நிற்க வேண்டும் என, உடன்பிறப்புகள் கட்சி தலைமைக்கு தெரிவித்து வருகின்றனர்.
தற்போது செல்வம் என்பவர், எம்.பி.,யாக உள்ளார். அரசு நிகழ்ச்சிகளில் மட்டும் இவர் பங்கேற்பதாகவும், மக்கள் பணிகளில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை எனவும் குற்றச்சாட்டு உள்ளது.
அதனால், காஞ்சிபுரம் எம்.எல்.ஏ.,வாக இருக்கும் எழிலரசனுக்கு, இம்முறை சீட்டு வழங்க வேண்டும் என கூறப்படுகிறது.
இவர், அமைச்சர் உதயநிதிக்கு நெருங்கியவர் என்பதால், எம்.பி., வேட்பாளராக நிறுத்தலாம் என்ற பேச்சும் உலவுகிறது.
-- -நமது நிருபர்- -

