/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சூணாம்பேடு மாணவியர் விடுதி சுற்றுச்சுவர் சீரமைக்கப்படுமா?
/
சூணாம்பேடு மாணவியர் விடுதி சுற்றுச்சுவர் சீரமைக்கப்படுமா?
சூணாம்பேடு மாணவியர் விடுதி சுற்றுச்சுவர் சீரமைக்கப்படுமா?
சூணாம்பேடு மாணவியர் விடுதி சுற்றுச்சுவர் சீரமைக்கப்படுமா?
ADDED : ஜன 16, 2025 12:14 AM

சூணாம்பேடு,சூணாம்பேடு பஜார் பகுதியில், அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதி செயல்பட்டு வருகிறது. விடுதியில் 35 மாணவியர் தங்கி படித்து வருகின்றனர்.
விடுதி அருகே வயல்வெளிப்பகுதி உள்ளதால், மாணவியரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சில ஆண்டுகளுக்கு முன் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. இந்நிலையில், 2023ல் விடுதியின் பின்புற சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது வரை சுற்றுச்சுவர் சீரமைக்கப்படவில்லை. அருகே உள்ள வயல்வெளி பகுதிகளில் இருந்து விஷப்பூச்சிகள் மற்றும் விஷப்பாம்புகள் விடுதி வளாகத்தில் தஞ்சமடையும் நிலை உள்ளது. விடுதியில் தங்கியுள்ள மாணவியருக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.
ஆகையால் துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சுற்றுச்சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவியர் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.