/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூவத்துார் அரசு பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீர் அகற்றப்படுமா?
/
கூவத்துார் அரசு பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீர் அகற்றப்படுமா?
கூவத்துார் அரசு பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீர் அகற்றப்படுமா?
கூவத்துார் அரசு பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீர் அகற்றப்படுமா?
ADDED : ஜன 07, 2024 12:50 AM

கூவத்துார்:கூவத்துார் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
கூவத்துார் பஜார் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இதில், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் ௨ வரை 300க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர்.
பள்ளி வளாகத்தில் மழைநீர் வெளியேற வசதி இல்லாததால், நேற்று பெய்த மழை காரணமாக, பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், பள்ளி மாணவர்கள் மழைநீரில் நடந்து செல்ல சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றவும், இனி வரும் நாட்களில் மழைநீர் தேங்காத வகையில், மணல் கொட்டி சமன்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.