/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பயன்பாடில்லாத கழிப்பறை மீண்டும் திறக்கப்படுமா?
/
பயன்பாடில்லாத கழிப்பறை மீண்டும் திறக்கப்படுமா?
ADDED : செப் 21, 2025 01:31 AM

அச்சிறுபாக்கம்:அச்சிறுப்பாக்கத்தில் பூட்டப்பட்டுள்ள கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில், 15 வார்டுகளை உள்ளன. இதில், 1வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில், பேரூராட்சி அலுவலகம் அருகே, 10 ஆண்டுகளுக்கு முன் பொதுக்கழிப்பறை கட்டப்பட்டது. வருவாய் ஆய்வாளர், வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு வரும் மக்கள் மற்றும் அப்பகுதி வியாபாரிகள், இக்கழிப்பறையை பயன்படுத்தி வந்தனர். பின், சரியான பராமரிப்பு இல்லாமல் கழிப்பறை பூட்டப்பட்டுள்ளது.
எனவே, பேரூராட்சி நிர்வாகத்தினர் கழிப்பறையை சுத்தம் செய்து, தண்ணீர் வசதி ஏற்படுத்தி, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.