sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

முட்டுகாடு பஹிங்காம் கால்வாயில் உயர்மட்ட பாலம் வருமா? 10 கி.மீ., துாரம் சுற்றுவது 2 கி.மீ., செல்லலாம்

/

முட்டுகாடு பஹிங்காம் கால்வாயில் உயர்மட்ட பாலம் வருமா? 10 கி.மீ., துாரம் சுற்றுவது 2 கி.மீ., செல்லலாம்

முட்டுகாடு பஹிங்காம் கால்வாயில் உயர்மட்ட பாலம் வருமா? 10 கி.மீ., துாரம் சுற்றுவது 2 கி.மீ., செல்லலாம்

முட்டுகாடு பஹிங்காம் கால்வாயில் உயர்மட்ட பாலம் வருமா? 10 கி.மீ., துாரம் சுற்றுவது 2 கி.மீ., செல்லலாம்


ADDED : ஆக 28, 2025 01:22 AM

Google News

ADDED : ஆக 28, 2025 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:ஓ.எம்.ஆர்., -- இ.சி.ஆர்., சாலையை இணைக்கும் வகையில், முட்டுக்காடு பகுதியில், பஹிங்காம் கால்வாய் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என, வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்களிடம் கோரிக்கை வலுத்துள்ளது. கோரிக்கை நிறைவேறும் பட்சத்தில், 10 கி.மீ., சுற்றி செல்லும் நிலை தவிர்க்கப்பட்டு, 2 கி.மீ., துாரத்தில் செல்லலாம்.

சென்னைக்கு அருகே செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்தில், வளர்ந்து வரும் புறநகர் பகுதியான முட்டுக்காடு ஊராட்சியில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.

முட்டுக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் பழைய மாமல்லபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை என இரண்டு முக்கிய சாலைகளிலும் உள்ளது.

இவ்வூராட்சி அடங்கிய பகுதிகளான ஏகாட்டூர், வாணியஞ்சாவடி, கழிப்பட்டூர் ஆகிய கிராமங்கள் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ளன.

அதேபோல், கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு, கரிக்காட்டுக்குப்பம் போன்ற கிராமங்கள் உள்ளன.

முட்டுக்காடு ஊராட்சி அலுவலகம், வி.ஏ.ஓ., அலுவலகம், சமுதாய கூடம் போன்றவை பழைய மாமல்லபுரம் சாலை என கூறப்படும் ஓ.எம்.ஆர்., சாலையில் உள்ளது.

இ.சி.ஆர்., சாலையில் இருந்து இந்த அலுவலகங்களுக்கு செல்ல வேண்டும் என்றால், கோவளம் சென்று, அங்கிருந்து ஓ.எம்.ஆர்., சாலையில் உள்ள கேளம்பாக்கம் வந்து, கேளம்பாக்கத்தில் இருந்து ஏகாட்டூர் வரவேண்டும். இவ்வாறு 10 கி.மீ., சுற்றிக்கொண்டு வர வேண்டும்.

அல்லது இப்பகுதி மக்கள் அக்கரை சென்று அங்கிருந்து சோழிங்கநல்லுார், நாவலூர் வழியாக 20 கி.மீ. சுற்றி வர வேண்டும். முட்டுக்காட்டில் ஓ.எம்.ஆர்., -இ.சி.ஆர்., சாலை இணைக்கும் வகையில் பஹிங்காம் கால்வாய் இடையே உயர்மட்ட பாலம் அமைத்தால் 2 கி.மீ., துாரத்தில் செல்லலாம்.

ஒரே ஊராட்சியில் உள்ள பகுதிகளுக்கு செல்ல வழி இல்லாததால் மக்கள் சுற்றி சுற்றி வரவேண்டிய நிலை உள்ளது.

எனவே, முட்டுக்காடு பகுதியில், ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., சாலையை இணைக்கும் வகையில், பஹிங்காம் கால்வாய் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும், என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

முட்டுக்காடு ஊராட்சி, நாளுக்கு நாள் வளர்ச்சியடைகிறது. மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது. ஒரே ஊராட்சியை சேர்ந்த மக்கள், இரு வேறு பிரதான சாலைகளில், ஊராட்சியின் துணை கிராமங்கள் அமைந்துள்ளதால் சிரமப்பட வேண்டிய நிலை உள்ளது.

எனவே, பக்கிங்காம் கால்வாய் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க அரசு கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இங்கு, பாலம் அமைத்தால், முட்டுக்காடு ஊராட்சி மக்களுக்கும் மட்டும் மல்லாமல், ஓ.எம்.ஆர்., சாலை மற்றும் அதன் அருகே உள்ள நாவலுார், தாழம்பூர், புதுப்பாக்கம், பொன்மார், மாம்பாக்கம், வேங்கடமங்கலம், கண்டிகை உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்களுக்கு இ.சி.ஆர்., சாலைக்கு செல்ல உதவியாக இருக்கும். அதேபோல், இ.சி.ஆர்., சாலையில் உள்ள மக்கள், ஓ.எம்.ஆர்., சாலைக்கு செல்லவும் உதவியாக இருக்கும்.






      Dinamalar
      Follow us