/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு புதிய கட்டடம் அமையுமா?
/
வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு புதிய கட்டடம் அமையுமா?
ADDED : அக் 11, 2024 12:54 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த கருங்குழி பேரூராட்சி, மூன்றாவது வார்டுக்கு உட்பட்ட மேலவலம்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே, வி.ஏ.ஓ., அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த கட்டடம் 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. அலுவலகத்தின் உள்பகுதியில் உள்ள கூரையின் ஒரு பகுதி, கடந்தாண்டு பருவமழையின் போது இடிந்து விழுந்தது.
கட்டடத்தின் கான்கிரீட் துாண்கள் மற்றும் கூரை பகுதி, உறுதி தன்மையற்ற நிலையில் இருந்ததால், தற்காலிகமாக வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு பகுதியில் வி.ஏ.ஓ., அலுவலகம் மாற்றப்பட்டது.
இந்நிலையில், பயன்பாடின்றி இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தி, அதே பகுதியில், மீண்டும் கிராம நிர்வாக அலுவலக கட்டடம் அமைக்கக்கோரி, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.