/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இருளர் குடியிருப்பு பகுதியில் மழைநீர் கால்வாய் அமையுமா?
/
இருளர் குடியிருப்பு பகுதியில் மழைநீர் கால்வாய் அமையுமா?
இருளர் குடியிருப்பு பகுதியில் மழைநீர் கால்வாய் அமையுமா?
இருளர் குடியிருப்பு பகுதியில் மழைநீர் கால்வாய் அமையுமா?
ADDED : நவ 10, 2024 01:24 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் ஒன்றியம் புதுப்பட்டு ஊராட்சியில் சாத்தமை, பில்லாஞ்சிகுப்பம், பசும்பூர், குன்னவாக்கம் உள்ளிட்ட குக்கிரமங்கள் உள்ளன.
இங்கு ஊராட்சியில் புதுப்பட்டு ஏரி தாங்கல் உள்ளது. தாங்கலில் இருந்து வெளியேறும் உபரிநீர், இருளர் குடியிருப்பு வழியாக செல்லும் மழைநீர் கால்வாயில் சென்று, மதுராந்தகம் ஏரியில் கலக்கிறது.
மழைக்காலங்களில் அதிகப்படியான நீர், கால்வாய் வழியாக செல்வதால், கால்வாயில் மண் அரிப்பு ஏற்பட்டு, இருளர் குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால், இருளர் இன மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, மழைநீர் கால்வாய் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.