/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கால்கடுக்க நிற்கும் பஸ் பயணியர் அஞ்சூரில் நிழற்கூரை அமையுமா?
/
கால்கடுக்க நிற்கும் பஸ் பயணியர் அஞ்சூரில் நிழற்கூரை அமையுமா?
கால்கடுக்க நிற்கும் பஸ் பயணியர் அஞ்சூரில் நிழற்கூரை அமையுமா?
கால்கடுக்க நிற்கும் பஸ் பயணியர் அஞ்சூரில் நிழற்கூரை அமையுமா?
ADDED : நவ 24, 2024 12:30 AM

மறைமலைநகர்:காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் அடுத்த அஞ்சூர் ஊராட்சியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமவாசிகள் வெளியூர்களுக்கு சென்று வர, 1 கி.மீ., நடந்து சென்று, சிங்கப்பெருமாள் கோவில் -- அனுமந்தபுரம் சாலையில், தென்மேல்பாக்கம் அருகே உள்ள நிறுத்தத்தில் இருந்து, பேருந்து பிடித்து சிங்கப்பெருமாள் கோவில், தாம்பரம் செங்கல்பட்டு ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
அதேபோல, கொண்டமங்கலம், தர்காஸ், அனுமந்தபுரம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவ -- மாணவியர், அஞ்சூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, இந்த பேருந்து நிறுத்தம் வந்து செல்கின்றனர்.
இந்த பேருந்து நிறுத்தத்தில் பயணியர் அமர இருக்கைகள் மற்றும் நிழற்குடை போன்ற எந்த வசதிகளும் இல்லாமல் உள்ளதால், வெயில் காலங்களில் மர நிழல்களிலும், மழைக்காலங்களில் நனைந்தபடி நிற்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
எனவே, இருக்கைகளுடன் கூடிய புதிய பேருந்து நிறுத்தம் அமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

