/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அரசு மருத்துவமனை வளாகத்தில் வாகனங்கள் நிறுத்தம் அமையுமா?
/
அரசு மருத்துவமனை வளாகத்தில் வாகனங்கள் நிறுத்தம் அமையுமா?
அரசு மருத்துவமனை வளாகத்தில் வாகனங்கள் நிறுத்தம் அமையுமா?
அரசு மருத்துவமனை வளாகத்தில் வாகனங்கள் நிறுத்தம் அமையுமா?
ADDED : டிச 02, 2024 02:18 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு, செங்கல்பட்டு மாவட்டம் மட்டுமின்றி, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், விபத்து, பிரசவம் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.
இங்கு, தினமும் புறநோயாளிகள் பிரிவில், 3,000க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். அதுமட்டுமின்றி, உள் நோயாளிகள் பிரிவில், 1,700க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புறநோயாளிகள் வாகனம் மற்றும் உள்நோயாளிகளின் உதவியாளர்கள் வாகனங்கள், அவசர சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு பிரிவு, பிரசவ வார்டு உள்ளிட்ட பல்வேறு வார்டுகள் பகுதிகளில், இருசக்கர வாகனம், கார் ஆகிய வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
அவசர சிகிச்சை பிரிவு வார்டு பகுதியில், சாலையின் இருபுறமும், இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால், ஆம்புன்லன்ஸ் வாகனங்கள் எளிதில் வந்து செல்ல முடியாத சூழல் உள்ளது. மேலும், நோயாளிகளும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
மருத்துவமனை வளாகத்தில், ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்படுவதால், மர்ம நபர்கள் வாகனங்களை திருடிச் செல்கின்றனர். மருத்துவமனை வளாகம் பின்புறம் காலியாக உள்ள இடத்தில், இருசக்கர வாகனங்கள், கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
வாகனங்களை பாதுகாக்க பாதுகாவலர்கள் நியமிக்க, மருத்துவமனை நிர்வாகம் ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.