/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நீலமங்கலம் வேகத்தடைகளில் எச்சரிக்கை வர்ணம் பூசப்படுமா?
/
நீலமங்கலம் வேகத்தடைகளில் எச்சரிக்கை வர்ணம் பூசப்படுமா?
நீலமங்கலம் வேகத்தடைகளில் எச்சரிக்கை வர்ணம் பூசப்படுமா?
நீலமங்கலம் வேகத்தடைகளில் எச்சரிக்கை வர்ணம் பூசப்படுமா?
ADDED : நவ 10, 2025 11:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சித்தாமூர் அடுத்த நீலமங்கலம் கிராமத்தில், விளாங்காடு செல்லும் தார்ச்சாலை உள்ளது.
இந்த சாலையை, தினமும் ஏராளமான வாகனங்கள் கடந்து செல்கின்றன.
குடியிருப்பு பகுதியில் வாகனங்கள் வேகமாக செல்வதை கட்டுப்படுத்த, சாலை நடுவே இரண்டு இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
வேகத்தடையில் எச்சரிக்கை வர்ணம் இல்லாமல் உள்ளதால், வேகமாக சாலையில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள், வேகத்தடை இருப்பது தெரியாமல் தடுமாறி, விபத்துகள் ஏற்படுகின்றன.
துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, வேகத்தடைக்கு எச்சரிக்கை வர்ணம் பூச வேண்டும்.
- க.முருகன் , சித்தாமூர்.