sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 வண்டலுார் பூங்காவில் டிச., 21ல் குளிர்கால முகாம்

/

 வண்டலுார் பூங்காவில் டிச., 21ல் குளிர்கால முகாம்

 வண்டலுார் பூங்காவில் டிச., 21ல் குளிர்கால முகாம்

 வண்டலுார் பூங்காவில் டிச., 21ல் குளிர்கால முகாம்


ADDED : நவ 24, 2025 02:57 AM

Google News

ADDED : நவ 24, 2025 02:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: வண்டலுார் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் குறித்து, பள்ளி மாணவ - மாணவியர் தெளிவாக அறிந்து கொள்ள வசதியாக, கோடை கால, குளிர்கால முகாம்கள் நடத்தப்படுவது வழக்கம். நடப்பு ஆண்டுக்கான குளிர் கால முகாம், டிச., 21ல் துவங்குகிறது.

இதன்படி, டிச., 21, 22; டிச., 24, 25; டிச., 26, 27; டிச., 28, 29 ஆகிய தேதிகளில், நான்கு கட்டங்களாக குளிர்கால முகாம் நடத்தப்படும்.

உயிரியல் பூங்கா வளாகத்தில், காலை, 9:00 மணி முதல், 1:00 மணி வரை முகாம் வகுப்புகள் நடக்கும்.

முகாமில், 5ம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்பு மாணவ - மாணவியர் பங்கேற்கலாம்.

இதற்கு, உயிரியல் பூங்காவின், https://aazp.in/wintercamp2025/ என்ற இணையதளத்தில், தங்கள் விபரங்களையும், 900 ரூபாய் கட்டணத்தையும் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

முகாம்களில் பங்கேற்கும் மாணவ - மாணவியர், உயிரியல் பூங்காவின் துாதராக அறிவிக்கப்பட்டு, அதற்கான சான்றிதழ் அளிக்கப்படும்.

ஆண்டுக்கு, 10 முறை உயிரியல் பூங்காவை இலவசமாக பார்வையிடுவதற்கான அனுமதி சீட்டும் வழங்கப்படும் என, உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us