/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
டிராக்டரில் இருந்து தவறி கீழே விழுந்த பெண் பலி
/
டிராக்டரில் இருந்து தவறி கீழே விழுந்த பெண் பலி
ADDED : ஏப் 22, 2025 12:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செய்யூர், செய்யூர் அடுத்த வெடால் கிராமம், கப்பிவாக்கம் சாலையைச் சேர்ந்தவர் தீபா, 41. இவர் நேற்று மாலை, 4:00 மணியளவில், டிராக்டர் வாகனத்தில் வயல்வெளியில் இருந்து விறகு ஏற்றிக் கொண்டு வீட்டிற்குச் சென்றார்.
டிராக்டரின் 'மட்கார்டு' மீது அமர்ந்து சென்ற போது, செய்யூர் சாலை வளைவு பகுதியில், டிராக்டரில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில், தலையில் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்குச் சென்ற செய்யூர் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு, மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.