/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாதவரத்தில் லாரி மோதி ஸ்கூட்டரில் சென்ற பெண் பலி
/
மாதவரத்தில் லாரி மோதி ஸ்கூட்டரில் சென்ற பெண் பலி
ADDED : நவ 26, 2024 02:37 AM

மாதவரம், அம்பத்துார், சூரப்பட்டு, வள்ளுவர் நகரைச் சேர்ந்த சங்கர்,48, என்பவரது மகள் ஷாலினி, 21. இவர், மஞ்சம்பாக்கத்தில் உள்ள மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தில் பணியாற்றினார்.
நேற்று காலை வீட்டிலிருந்து, தன் 'டி.வி.எஸ்., ஜூபிடர்' ஸ்கூட்டரில், மாதவரம் 200 அடி சாலை வழியாகச் சென்றார்.
மஞ்சம்பாக்கம் அருகே, மாதவரம் சின்ன ரவுண்டானா பகுதியில் சென்ற போது, இவருக்கு பின்னால் வந்த ஈச்சர் லாரி, ஸ்கூட்டரின் பக்கவாட்டில் இடித்தது.
இதில் நிலை தடுமாறிய ஷாலினி, கீழே விழுந்தார். அப்போது, லாரியின் பின்பக்க சக்கரம் ஷாலினி மீது ஏறி இறங்கி, சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
தகவல் அறிந்து வந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், ஷாலினி உடலை கைப்பற்றி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரான தென்காசி மாவட்டம், கடையநல்லுாரைச் சேர்ந்த கனி, 22, என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இறந்த ஷாலினிக்கு, இன்னும் திருமணமாகவில்லை.
மாதவரம் சின்ன ரவுண்டானா, மேம்பாலம் அருகே, கனரக வாகனங்களால் நெரிசல் ஏற்பட்டு, அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும், இரு பெண்கள் உட்பட, நால்வர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இருவர் படுகாயமடைந்து உள்ளனர்.