/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லை விடுதியில் பெண் மர்ம சாவு கள்ளக்காதலன் கொன்று நாடகமாடியது அம்பலம்
/
மாமல்லை விடுதியில் பெண் மர்ம சாவு கள்ளக்காதலன் கொன்று நாடகமாடியது அம்பலம்
மாமல்லை விடுதியில் பெண் மர்ம சாவு கள்ளக்காதலன் கொன்று நாடகமாடியது அம்பலம்
மாமல்லை விடுதியில் பெண் மர்ம சாவு கள்ளக்காதலன் கொன்று நாடகமாடியது அம்பலம்
ADDED : ஜன 25, 2025 12:22 AM

மாமல்லபுரம்,
மாமல்லபுரம் தனியார் விடுதி அறையில், பெண்ணை கொலை செய்து விட்டு, கள்ளக்காதலன் நாடகமாடியது அம்பலமானது.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில், கடந்த 22ம் தேதி, வாலிபர், இளம்பெண் தங்கினர். அன்று மாலை, வாலிபர் வெளியே சென்று திரும்பியபோது, அறையில் உள்ள மின்விசிறியில் பெண் துாக்குப் போட்டு இறந்திருந்தார்.
மாமல்லபுரம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாலிபரிடம் விசாரித்தனர்.
பவுஞ்சூர் அடுத்த, சித்திரவாடியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் ஜெயராஜ், 28, பவுஞ்சூர் அடுத்த, தர்மாபுரத்தைச் சேர்ந்த சுதந்திரம் மனைவி சங்கீதா, 33, என தெரிந்தது. உல்லாசமாக இருந்த அவர்கள், பின் ஏற்பட்ட தகராறில், துாக்குப்போட்டு இறந்ததாக, ஜெயராஜ் போலீசாரிடம் தெரிவித்தார்.
17 வயது மகன், 15 வயது மகள் உள்ள சங்கீதா, திருமணமாகி குழந்தை உள்ள ஜெயராஜூடன் கள்ளத்தொடர்பு கொண்டிருந்ததை அறிந்து, கணவர் கை விட்டுள்ளார். இதனால் நந்திவரத்தில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்த சங்கீதா, கள்ளத்தொடர்பை ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்தது, விசாரணையில் தெரிந்தது.
மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் கூறியதாவது:
கள்ளக்காதலி சங்கீதாவிற்கு வேறு சிலருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகித்து, அதுபற்றி ஜெயராஜ் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில், பெண்ணின் கழுத்தை இறுக்கி கொன்று, தற்கொலை நாடகமாடியுள்ளார். பிரேத பரிசோதனையில், கொலை செய்யப்பட்டது உறுதியாகியது. ஜெயராஜை நேற்று கைது செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

