/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நண்பர் அறைக்கு சென்ற பெண் நள்ளிரவில் அலங்கோலமாக மீட்பு
/
நண்பர் அறைக்கு சென்ற பெண் நள்ளிரவில் அலங்கோலமாக மீட்பு
நண்பர் அறைக்கு சென்ற பெண் நள்ளிரவில் அலங்கோலமாக மீட்பு
நண்பர் அறைக்கு சென்ற பெண் நள்ளிரவில் அலங்கோலமாக மீட்பு
ADDED : ஜூலை 20, 2025 11:07 PM
தாம்பரம்:பெண்கள் தங்கும் விடுதி மூடப்பட்டதால், நள்ளிரவில் ஆண் நண்பர் அறையில் தங்க சென்ற பெண்ணை, பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட நிலையில், போலீசார் மீட்டனர்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது பெண், வேளச்சேரியில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கி பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம், இவரது நண்பருடன் கடற்கரைக்கு சென்று, இரவு 10:30 மணிக்கு விடுதிக்கு திரும்பினார். வெகு நேரமானதால் விடுதி பூட்டப்பட்டிருந்தது.
இதையடுத்து அந்த பெண், தன் மற்றொரு நண்பரான, தாம்பரம் அருகே அஸ்தினாபுரம், திருமலை நகரில் வசிக்கும் ஹரிஷ், 23, என்பவரை தொடர்பு கொண்டு பேசினார். ஹரிஷ், அந்த பெண்ணை தான் வசிக்கும் வீட்டின் பக்கத்து அறைக்கு வந்து தங்குமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து, 'ரேபிடோ பைக் டாக்சி'யில் அந்த பெண், நள்ளிரவு 12:30 மணிக்கு அஸ்தினாபுரம் சென்றார். அங்கு, ஹரிஷ் வரச்சொன்ன வீட்டை பார்த்ததும், அந்த பெண்ணுக்கு சந்தேகம் எழுந்தது.
இதனால், ரேபிடோ பைக் ஓட்டுநர் ராஜேஷ் என்பவரிடம், 'நான் உள்ளே சென்று சூழலை பார்த்துவிட்டு சொல்கிறேன். அதுவரை இங்கிருந்து செல்லாமல் இருங்கள்' என கூறிவிட்டு, அந்த அறைக்கு சென்றுள்ளார்.
வெகு நேரமாகியும் அப்பெண் வராததால் பைக் ஓட்டுநர் ராஜேஷ், காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100க்கு போன் செய்து, தகவல் கூறினார்.
இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற சிட்லபாக்கம் போலீசார், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, ஹரிஷ், அவரது ஐந்து நண்பர்கள் மது போதையில் இருந்தனர்.
மேலும் ஹரிஷ், அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த பெண்ணை மீட்ட போலீசார், ஹரிஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.