/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வீடு புகுந்து பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு
/
வீடு புகுந்து பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு
ADDED : ஏப் 13, 2025 01:43 AM
கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லுார், மகிஷ்மதி கார்டன், பிரகஸ்வதி குடியிருப்பின் தரைத் தளத்தில் வசிப்பவர் வினோத்குமார், 39; கார் ஓட்டுநர்.
இவருடன் மனைவி மம்தாஸ்ரீ, மற்றும் குழந்தை வசிக்கின்றனர்.
நேற்று முன்தினம் அதிகாலை 5:30 மணியளவில், முகமூடி அணிந்த மர்ம நபர், வினோத்குமாரின் வீட்டுக் கதவை இரும்பு கம்பியால் உடைத்து, உள்ளே நுழைந்து உள்ளார். பின், உறங்கிக் கொண்டிருந்த அவரது மனைவி அணிந்திருந்த தாலிச் செயினை பறித்து உள்ளார்.
அப்போது அவர் அலற முற்பட்ட போது, கொலை செய்துவிடுவதாக மிரட்டி, 4 சவரன் தாலி செயினை பறித்து தப்பினார்.
இச்சம்பவம் குறித்து, வினோத்குமார் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். கூடுவாஞ்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

