/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நுாறு நாள் வேலை வழங்க வேண்டி கொளத்துாரில் பெண்கள் போராட்டம்
/
நுாறு நாள் வேலை வழங்க வேண்டி கொளத்துாரில் பெண்கள் போராட்டம்
நுாறு நாள் வேலை வழங்க வேண்டி கொளத்துாரில் பெண்கள் போராட்டம்
நுாறு நாள் வேலை வழங்க வேண்டி கொளத்துாரில் பெண்கள் போராட்டம்
ADDED : பிப் 05, 2025 01:00 AM

சித்தாமூர்:சித்தாமூர் ஒன்றியத்தில் 43 ஊராட்சிகள் உள்ளன.
ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் குளம் அமைத்தல், கால்வாய் சீரமைத்தல், மரக்கன்றுகள் நடுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கொளத்துார் ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளம்பாக்கம், தாமரைக்கேணி, தேன்பாக்கம், கொளத்துார் உள்ளிட்ட கிராமங்களில் 2024-25ம் நிதியாண்டில், மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டம் வாயிலாக, 38 நாட்கள் மட்டுமே பணி வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிதியாண்டு அடுத்த சில மாதங்களில் நிறைவு பெற உள்ள நிலையில், மீதமுள்ள நாட்களுக்கான பணியை உடனே வழங்க வேண்டி, கொளத்துார் ஊராட்சியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள், சித்தாமூர் பி.டி.ஓ., அலுவலகம் முன் நேற்று, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அலுவலகம் எதிரே கஞ்சி காய்ச்சி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு மதிய உணவாக வழங்கினர்.
இதுகுறித்து, சித்தாமூர் துணை பி.டி.ஓ., நாராயணன் கூறியதாவது:
கொளத்துார் ஊராட்சிக்கு கடந்த 6 மாதங்களில், 40 லட்சம் ரூபாய் அளவில் பணிகள் வழங்கப்பட்டு உள்ளன.
தற்போது தேன்பாக்கம், கொளத்துார், பள்ளம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 42 லட்சம் ரூபாயில் குளம் அமைத்தல், மரம் நடுதல் போன்ற பணிகள் மேற்கொள்ள திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, மாவட்ட நிர்வாக அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
அனுமதி பெற்ற உடனே, மக்களுக்கு பணி வழங்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.