/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நீர்த்தேக்க தொட்டி பணிகள் மந்தம் காலி குடத்துடன் பெண்கள் போராட்டம்
/
நீர்த்தேக்க தொட்டி பணிகள் மந்தம் காலி குடத்துடன் பெண்கள் போராட்டம்
நீர்த்தேக்க தொட்டி பணிகள் மந்தம் காலி குடத்துடன் பெண்கள் போராட்டம்
நீர்த்தேக்க தொட்டி பணிகள் மந்தம் காலி குடத்துடன் பெண்கள் போராட்டம்
ADDED : மே 19, 2025 02:34 AM

மதுராந்தகம்,:நிறுத்தப்பட்டுள்ள, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க கோரி, காலி குடங்களுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியம், பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட தாதங்குப்பம் கிராமம் உள்ளது.
பாக்கம் -- வசந்தவாடி சாலையில் அங்கன்வாடி மையம் அருகே, 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழமையானதால், இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.
அந்த பகுதியில் புதிதாக, 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி அமைக்க, முதற்கட்ட பணிகள் துவக்கப்பட்டன.
பணிகள் துவங்கி சில மாதங்கள் ஆகியும், இன்னும் பணிகள் முடிவு பெறாமல், ஆரம்பகட்ட நிலையிலேயே உள்ளது.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமானப் பணியை, மீண்டும் துவங்க கோரி, மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு புகார் மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதனால், குடிநீர் கிணற்றிலிருந்து நேரடியாக, குழாய் வாயிலாக மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இதனால் சுகாதாரமின்றி, பாசி படர்ந்த தண்ணீர் விநியோகிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணியை விரைந்து துவக்க, வட்டார வளர்ச்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நேற்று அப்பகுதி பெண்கள், காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.