/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிளாம்பாக்கத்தில் புது மதுக்கடை எதிர்த்து பெண்கள் போராட்டம்
/
கிளாம்பாக்கத்தில் புது மதுக்கடை எதிர்த்து பெண்கள் போராட்டம்
கிளாம்பாக்கத்தில் புது மதுக்கடை எதிர்த்து பெண்கள் போராட்டம்
கிளாம்பாக்கத்தில் புது மதுக்கடை எதிர்த்து பெண்கள் போராட்டம்
ADDED : பிப் 18, 2025 11:55 PM

கிளாம்பாக்கம், கிளாம்பாக்கம் பேருந்து முனையம் அருகே, புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெண்கள், நேற்று போராட்டம் நடத்தினர்.
வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில், ஆசியாவின் பெரிய பேருந்து முனையம் இயங்கி வருகிறது. மாதத்திற்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணியர் இங்கிருந்து பேருந்துகளில் பயணிக்கின்றனர்.
இந்நிலையில், இப்பேருந்து நிலையம் அமைந்துள்ள ஜி.எஸ்.டி., சாலையில், தனியார் பள்ளி எதிரே, சிக்னல் அருகே புதிய டாஸ்மாக் கடை அமைக்கும் பணியில், தமிழக அரசு ஈடுபட்டது.
இதற்காக, நேற்று காலை, வாகனத்தில் மது பாட்டில்கள் எடுத்துவரப்பட்டு, கடையில் அடுக்கும் பணியில் டாஸ்மாக் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அப்போது, டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பேச்சு நடத்தினர். பின், பெண்கள் கலைந்து சென்றனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய ராஜேஸ்வரி என்பவர் கூறியதாவது:
பள்ளிக்கூடம் அருகே 100 மீ., தொலைவிற்குள், ஜி.எஸ்.டி., சாலை அருகே டாஸ்மாக் கடை திறப்பதால் பள்ளி மாணவர்கள், பெண்கள் பாதிக்கப்படுவர். இங்கு டாஸ்மாக் கடை திறந்தால், குடிமகன்கள் தொல்லையால், பேருந்து முனையத்திற்கு வரும் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்காது. இந்த இடத்தில் டாஸ்மாக் கடை அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.