/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பவுஞ்சூர் பஜார் பகுதியில் மகளிர் கழிப்பறை அவசியம்
/
பவுஞ்சூர் பஜார் பகுதியில் மகளிர் கழிப்பறை அவசியம்
ADDED : செப் 02, 2025 01:02 AM
பவுஞ்சூர் பவுஞ்சூர் பஜார் பகுதியில் மகளிர் கழிப்பறை அமைக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பவுஞ்சூர் பஜார் பகுதியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், காவல் நிலையம், வேளாண் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
மேலும், இப்பகுதியில் 150க்கும் மேற்பட்ட கடைகள் செயல்படுகின்றன.
திருவாதுார், கடுகுப்பட்டு, பச்சம்பாக்கம் உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் மதுராந்தகம், கூவத்துார், செங்கல்பட்டு போன்ற பகுதிகளுக்குச் செல்ல, பவுஞ்சூர் பஜார் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்துகின்றனர்.
பொதுமக்கள் அடர்த்தியாக வசித்து வரும் பவுஞ்சூர் பஜார் பகுதியில், மகளிர் கழிப்பறை இல்லாததால், பொதுமக்கள் மற்றும் கடைகளில் பணிபுரியும் பெண்கள் இயற்கை உபாதைகளை கழிக்க, கடும் சிரமப்படுகின்றனர்.
எனவே, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் பவுஞ்சூர் பஜார் பகுதியில் மகளிர் கழிப்பறை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.