/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
45 கி.மீ., சாலையை சீரமைக்க ரூ.50 கோடி சிறுபாலங்கள் அமைக்கும் பணி துவக்கம்
/
45 கி.மீ., சாலையை சீரமைக்க ரூ.50 கோடி சிறுபாலங்கள் அமைக்கும் பணி துவக்கம்
45 கி.மீ., சாலையை சீரமைக்க ரூ.50 கோடி சிறுபாலங்கள் அமைக்கும் பணி துவக்கம்
45 கி.மீ., சாலையை சீரமைக்க ரூ.50 கோடி சிறுபாலங்கள் அமைக்கும் பணி துவக்கம்
ADDED : நவ 09, 2024 01:06 AM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறையில், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் உள்ளது.
இதில், செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆகிய உட்கோட்டங்கள் உள்ளன. இக்கோட்டங்களில், மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கிய சாலைகள், மாவட்ட இதர சாலைகள் மற்றும் கரும்பு அபிவிருத்தி சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில், 1,283.504 கி.மீ., நீள சாலைகள் உள்ளன.
இந்த கோட்டங்களில், நெடுஞ்சாலைத் துறையின் கீழ் உள்ள சாலைகளில் பெரும்பாலானவை, போக்குவரத்துக்கு பயனற்றவையாக உள்ளதால், அடிக்கடி அரசு மற்றும் தனியார் பேருந்துகள், வாகனங்கள் பழுதாகி நின்று விடுகின்றன. இதனால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அரசு மருத்துவமனை, அத்தியாவசிய பணி உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு வெளியிடங்களுக்கு சென்று வருவோர் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என, கலெக்டர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் அரசிடம் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இச்சாலைகளை நெடுஞ்சாலைத்துறையினர் கள ஆய்வு செய்து, 75 கி.மீ., சாலைகள், சிறுபாலங்கள் அமைக்க, அரசுக்கு கருத்துரு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் 2024 - 25ம் நிதியாண்டில், 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, அரசு உத்தரவிட்டது.
இந்நிதியின் வாயிலாக, 45 கி.மீ., சாலைகளை சீரமைத்து, இரண்டு வழிச்சாலைகளாக மேம்படுத்தப்படுகின்றன. 45 சிறுபாலங்கள் கட்டடப்படுகின்றன. இந்த பணிகளுக்கான டெண்டர் விடும் பணி நடைபெற்று வருகிறது.
மாவட்டத்தில், 45 கி.மீ., சாலைகள் சீரமைக்கப்படுகின்றன. 45 சிறு பாலங்கள் புதிதாக கட்டப்படுகின்றன. இம்மாதம் டெண்டர் விடும் பணி முடிந்தவுடன், பணிகள் துவங்கி, வரும் பிப்ரவரி மாதத்திற்குள் முடிக்கப்படும்.
- நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், செங்கல்பட்டு.