/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குண்டூரில் சிறுபாலம் பணி துவக்கம்
/
குண்டூரில் சிறுபாலம் பணி துவக்கம்
ADDED : நவ 29, 2024 08:28 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகராட்சி, குண்டூர் பகுதியில், பல ஆண்டுகளுக்கு முன் கட்டடப்பட்ட சிறுபாலம் வலுவிழுந்து இருந்தது. இந்த பாலம் வழியாக, அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், நகரவாசிகள் சென்றுவருகின்றனர்.
இதனால், சிறுபாலத்தை இடித்துவிட்டு, புதிய பாலம் கட்டித்தர வேண்டும். இதே பகுதியில், சாலையின் இருபுறமும் மழைநீர் கால்வாய் கட்டித்தர வேண்டும் என, நகராட்சி நிர்வாகத்திடம், நகரவாசிகள் வலியுறுத்தி வந்தனர்.
அதன்பின், சிறுபாலம், மழைநீர் கால்வாய் கட்ட, நகராட்சி பொது நிதியிலிருந்து, ஏழு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, சிறுபாலம் மற்றும் மழைநீர் கால்வாய் கட்டும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.